ரணம் – அறம் தவறேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரணம்அறம் தவறேல் கதை

கதையின் நாயகன் சிவா, சிதைந்து போன முகத்தை, அதன் உண்மைத்தன்மையுடன் வரையக்கூடியவர். இவர் சில காவல் அதிகாரிகளுக்கு உதவியாகவும், அவர்களுக்கு கிரைம் சீனையும் எழுதுகொடுப்பவர், இவருக்கு 5 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விபத்தால் உடம்பில் சில பிரச்சனைகளும், அதே போல் 5 வருடங்களுக்கு முன் நடந்த சில விஷயங்களையும் மறந்து விடுகிறார்.

ஒருநாள் காவல் நிலையத்தின் முன் மர்மமான நபர் ஒருவர் ஒரு அட்டை பெட்டியை வைத்துவிட்டு செல்கிறார், அதில் இரண்டு கால்கள் கருகி போய் இருக்கிறது, இதேபோல் வெவ்வேறு இடங்களில் உடல், மற்றும் கைகள் அட்டைப்பெட்டியில் கிடைக்கிறது, மற்றும் இதனை விசாரித்த காவல் அதிகாரி ராஜேந்திரனும் காணாமல் போகிறார், ராஜேந்திரன் இடத்தை நிரப்ப வருகிறார் இந்துஜா. கடைசியில் இந்துஜா சிவானுடன் இணைந்து இந்த கொலையெல்லாம் செய்தது யார்? என்பதையும் கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஷெரிஃப் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *