நினைவெல்லாம் நீயடா தமிழ் திரைப்பட விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா கதை

கதையின் நாயகன் கெளதம் தனது, பள்ளி பருவ காதலி மலர் விழியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். பள்ளி முடித்த பிறகு மலர்விழி வெளிநாடு சென்றிருப்பார், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல், அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார், அவரை எப்படி தொடர்பு கொள்வது என அறியாமல், இவரால் முடிந்தளவு தேடுகிறார், ஆனால் மலர்விழியை பற்றி எதுவும் தெரியவில்லை.

Read Also: Ranam – Aram Thavarel Tamil Movie Review

கௌதமிற்கு, ஆனந்தி என்ற முறைப்பெண் இருக்கிறார். அவருக்கு சிறுவயதிலிருந்தே கெளதம் மேல் காதல், ஆனால் கெளதம் மலர்விழி நினைப்பாகவே இருப்பதால், ஆனந்தி தற்கொலைக்கு சென்றுவிடுகிறார், கௌதமின் நண்பர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இணைத்து மலர்விழி இனி வரப்போவதில்லை என கூறி ஆனந்தியை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர், கடைசியில் கெளதம் ஆனந்தியுடன் இணைந்தாரா? அல்லது காத்திருந்து மலர் விழியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை

இந்த கதையினை இயக்குனர் ஆதிராஜன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡படத்தின் கிளைமேக்ஸ்

படத்தில் கடுப்பானவை

➡அடிக்கடி வரும் பாடல்கள்
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *