இது மார்டன் முந்தானை முடிச்சு !!

 இயக்குநர்-நடிகர் பாக்கியராஜ் 1983 ஆம் ஆண்டு  எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான படம் தான்  ‘முந்தானை முடிச்சு’. இதில், பாக்கியராஜுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். மேலும், இப்படம் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய  மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

இந்த படம்  வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ள நிலையில் தற்போது  ‘முந்தானை முடிச்சு’, மீண்டும்  ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை, மீண்டும் பாக்கியராஜ் இயக்க, கதாநாயகனாக நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/JsbSathish/status/1262953883439116288?s=19

இப்படத்தை தயாரிக்கவுள்ள JSB Film Studios-ன் JSB சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்து சசிகுமார் மற்றும் பாக்கியராஜின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *