ட்விட்டரில் பிரேம்ஜி அடிக்கும் கூத்து !!

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்ராக இருப்பவர்  மா.கா.பா. 2014-ஆம் ஆண்டில் ‘வானவராயன் வல்லவராயன்’ திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய மா கா பா  இதுவரை ஒன்பது படங்கள் நடித்துள்ளார்.அவர் கடைசியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஹரிஷ் கல்யாணின் நண்பராக நடித்து அசதி இருந்தார்.  அவருக்கு இன்று பிறந்தநாள். 

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் மஹத் ராகவேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு பெரிய மிஷின் கன்னை வைத்துக்கொண்டு இருவரும் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்ட அவர் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங் மாகாபா ஆனந்த். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு சிறந்த ஆண்டாக அமையட்டும்! லவ் யூ” என பதிவிட்டுள்ளார்.  அதுல சுவாரஷியம் என்னனா இவங்க ரெண்டு பேருக்கு பின்னாடி ஒரு பெண் மறைஞ்சு இருப்பது போல இருந்துச்சு. 

ஆகா இந்த பதிவை பாத்த பிரேம் ஜி “உங்கள் பின்னால் இருக்கும் பெண் யார் காய்ஸ்.?” என கமண்ட் செய்தார். அதற்கு, அவர் வி.ஜே. சித்ரா, ஏன் பிரேம்.? என்று மஹத் கேட்க, “இல்ல மச்சி முகம் தெரியல, அதான் கேட்டேன்” என ரிட்விட் செய்தார். இதற்கு சிரிக்கும் எமோஜிகளை மஹத் போட, வடிவேலுவின் காமெடியான சிரிப்பு வீடியோவை போட்டு, சமூக வலைதளத்தில் வந்து ஒரே கூத்தடிக்கின்றனர். இதை மக்களை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். 

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here