ராஷ்மிக்கா பாத்த முதல் படம் கில்லி!!

Reaction குயின் என்று செல்லமாக ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும் 

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, சூப்பர்ஹிட் கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’யுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

144 தடை உத்தரவால் வீட்டில் இருக்கும் கதாநாயகிகள் ரசிகர்கள் உடன் நேரலையில் பேசுவது உண்டு. அப்படி  சமீபத்தில் ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் உரையாடலில் ஈடுபட்டார் ராஸ்மிகா. அவர்களில் ஒருவர் ராஷ்மிகாவிடம் ‘தியேட்டரில் பார்த்த முதல் படம் எது?’ என்று கேட்டார். 

அவர் அந்த கேள்விக்கு, தியேட்டரில் தனது முதல் படம் ‘கில்லி’ என்று பதிலளித்துள்ளார். அது போதுமே விஜய் ரசிகர்களை கையில் பிடிக்கமுடியவில்லை !!மேலும் அவரது ட்வீட்டில் “கில்லி என்று நினைக்கிறேன்,என் அப்பா என்னை அழைத்துச் சென்றிருந்தார்.

எனக்குத் தெரியவில்லை, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் அந்த நாட்களில் ஒரு பெரிய movie buff. இப்போது நான் ஒரு நடிகையாக இருக்கும்போது, அவர் இல்லை” என்று  உருக்கமாக பதில் சொல்லிருந்தாரு. இதற்கு பலரும் ராஸ்மிகாக்கு ஆதரவை தெரிவிச்சுட்டு வராங்க. 

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here