குட்டி அருண் விஜய் செய்த புண்ணியம்

கொரோனா பாதிப்பு காரணமாக  படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருக்கும் அருண் விஜய், அவரது உடற்பயிற்சி வீடியோக்களையும், தன் குடும்பத்துடன் செலவிடும் அழகிய நேரங்களின் புகைப்படங்களியும் தன் ரசிகர்களுடன் சமூக சலைதள பக்கங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் தனது மகன் அர்னவ் குறித்து பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அழகிய பதிவை வெளியிட்டுள்ளார். அர்னவ் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு தெரு நாய் மற்றும் அதன் குட்டிகளுக்கு, அதாவது சக உயிரினங்களுக்கு இரக்கத்தைக்…

Read More

அனுஷ்கா படம் 26கோடியில் அமேசான் பிரைமில்!

நிசப்தமும் ott ல வரபோதா? அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள்.  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா ஷெட்டிக்கு கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் ‘சாய் ரா’ திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி பல மொழிகளில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டுதலில் இருப்பதால், வெளியீட்டை ஒத்திவைத்துள்ள தயாரிப்பாளர்கள், புதிய ரிலீஸ்…

Read More

இரத்தம், ரணம் & ரௌத்திரம்!!

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ‘RRR’ திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற தலைப்பின் விரிவாக்கமாக தமிழில் இரத்தம், ரணம் மற்றும் ரௌத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  பான் இந்தியா திரைப்படமாக பன்மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின்…

Read More

ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர்

பிறருக்கு உதவும் வழியே இறைவனை காணமுடியும் என்று தீர்க்கமாக நம்புபவர் தான் ராகவா லாரன்ஸ் !! திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்த கொரோனா சூழலில் தினமும் பல நூறு மக்களுக்கு அவர் வேண்டியனவற்றை செய்து வருகின்றார்.  இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட…

Read More

வாழ்க தமிழ் !! வாழ்க மனிதம்!!

மே 18 மானதமிழர்கள் மறக்க முடியாத நாள் !! தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம் டி. இமான் அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே பெரிய அளவில் பெயர்பெற்ற இசையமைப்பாளராக அவர் உயர்ந்தார். இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும், கும்கி ஆகிய இரு படங்களில் இசையமைத்ததற்காக இவர்…

Read More

தாய் மண்ணிற்கு திரும்பும் பிரித்திவிராஜ்

கொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அதையடுத்து அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு வர உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.  அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களின் நிலை குறித்து தெளிவுபடுத்தினார். அவரும் அவரது குழுவினரும் நன்றாகவும், தவறாமல் குழு மருத்துவர் மற்றும் ஜோர்டான்…

Read More

நாணயம் என்றல் இருபக்கம் இருக்கத்தானே செய்யும் !

கொரோனா காரணமாக தற்போது சினிமா துறை பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.  இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியாவதற்கு சில எதிர்ப்புகள் வெளியாகின. இது குறித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது “பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTT தளத்தில் விற்பணையாகியிருப்பதாகவும், அது திரையரங்குகளுக்கு வராமலேயே அதில் வெளியிடப்படுவதாக செய்திகள் வந்தது. அதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில்…

Read More

மிஸ்கின் அருண் விஜய் இணையும் புதிய கூட்டணி

சைக்கோ’ பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார். அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார். அதையடுத்து, சிம்புவிடம் ஒரு கதையைக் கூறியதாகவும், அந்த கதைக்களத்தில் ஈர்க்கப்பட்டு, மிஷ்கினுடன் இப்படத்தில் பணியாற்ற விருப்பப்படுவதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளினாகின. சிம்பு, வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்பட படப்பிடிப்பை முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுவந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவராத இந்நிலையில்,…

Read More

நல்ல பாட்டுலாம் விஜய் பயலுக்கு தான் அமையுது – தல அஜித்

லாக் டவுன் போட்டதும் தான் போட்டாங்க,  தினம் இன்ஸ்டாகிராம் லைவ்-ல திரைபிரபலங்கள் ஏதாச்சும் வாய்ய குடுத்து மாட்டிக்குறாங்க !!  சுசித்ரா பிரபலமான பாடகி என்று அனைவருக்கும் தெரியும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடல்களாக அமைந்தது. சமீபத்தில் இவர் பெரும் சர்ச்சையில் சிக்கியதோடு, பல நடிகை, நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் தல அஜித்திற்கு சுசித்ரா பாடிய பாடலில் மிகவும் பிடித்தது என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தளபதி விஜயின் வேட்டைக்காரன்…

Read More

மகத்தான மனிதர் விஜய் ஆண்டனி !!

மூடர் கூடம் என்ற படத்தின் மூலம் 2013ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் தான் இயக்குநர் நவீன். பல இயக்குநர்களுக்கு தங்களுடைய முதல் படத்தில் கிடைக்காத அங்கீகாரம் இவருக்கும் கிடைத்தது. சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பால் முதல் படத்திலேயே மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் சிறந்த வசனங்கள் எழுதியதற்காக இவருக்கு விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  தனது முதல் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சற்று இடைவெளி கொடுத்த நவீன், மீண்டும் சமுத்திரக்கனி…

Read More