சபாநாயகன் உங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்தாக இருக்கும்” – அசோக் செல்வன்

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை…

Read More

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான்…

Read More

குய்கோ தமிழ் திரைப்பட விமர்சனம்

குய்கோ கதை தங்கராஜ் ஒரு தனியார் டுடோரியலில் கணக்கு வாத்தியாராக வேலை செய்துகொண்டிருக்கிறார். ஒருசில காரணங்களால் அவருக்கு வேலை போகிறது. அப்போது சென்னையில் IPL மேட்ச் பார்ப்பதற்காக தன் மாமாவிடம் பணம் கேட்கிறார். அதே சமயம் மலையப்பனின் அம்மா இறந்துவிடுகிறார், அவரை வைப்பதற்கான ஐஸ் பெட்டி தங்கராஜ்-ன் மாமா கடையில் எடுக்கிறார்கள். Read Also: 80s Buildup Movie Review மலையப்பா துபாயிலிருந்து வருவதற்கு 4 நாட்கள் ஆகும், ஐஸ் பெட்டியை மலையப்பனின் வீட்டிற்கு சென்று வைக்கும்போது…

Read More

80ஸ் பில்டப் தமிழ் திரைப்பட விமர்சனம்

80ஸ் பில்டப் கதை கதையின் நாயகன் கதிர் பெரிய ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவர். கதிருக்கும் அவரின் தங்கை மஞ்சகனிக்கும் எப்போதும் சண்டை நடந்துகொண்டிருக்கும், நாயகன் கதிர் ஒரு கமல் ரசிகன், அவரின் தாத்தா ஒரு ரஜினி ரசிகர். ஒருநாள் கமலின் சகலகலா வல்லவன் திரைப்படம் வெளியாகும் அன்று கதிரின் தாத்தா இறந்துவிடுகிறார், இதனால் கொண்டாட்டத்தை விட்டுவிட்டு கதிர் வீட்டிற்கு செல்கிறார். Read Also: Joe Movie Review வீட்டிற்கு சென்று பார்த்தால் கதிரின் அக்கா மகள் தேவி…

Read More

லாக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

‘லாக்கர்’ கதை கதாநாயகனும் அவரது நண்பர்களும் இணைந்து ஒரு வழிப்பறியில் இறங்குகிறார்கள்.தேர்தலில் மக்களுக்காக வாக்குக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் பல லட்ச ரூபாய் பணத்தை நூதனமான முறையில் மோசடி செய்து கைப்பற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட நாயகனை நிரஞ்சனி காதலிக்கிறார். காதலன் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்து விலக நினைக்கிறார். தன்னைப் பற்றித் தவறாக நினைத்த காதலியை விக்னேஷ் அறைந்து விடுகிறார்.விக்னேஷ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல விரும்புகிறார். அவர்கள் இருவரும் தனியே அமர்ந்து ஒரு காபி ஷாப்பில் பேசிக்…

Read More

விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளோடு, இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரை காவியமாக உருவாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கொண்டாடும் ரசிகர்கள்! நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அதன் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும் பெரும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கண்ணப்பா படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவராலும் படத்தின் மீதான…

Read More

சில நொடிகளில் தமிழ் திரைப்பட விமர்சனம்

சில நொடிகளில் கதை லண்டன்; கதையின் நாயகன் ராஜ் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு மாயா என்கிற மாடல் அழகியுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது, ஒருநாள் அவரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் ராஜ், மாயாவை வீட்டிற்கு அழைத்துவருகிறார், இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் போதை பொருளை அதிகமாக எடுத்ததனால், மாயா மயங்கி விழுந்து இறந்து விடுகிறார். Read Also: Joe Movie Review தனது மனைவி வருவதற்குள் மாயாவை மறைத்து வைக்க வேண்டும் என நினைக்கும் ராஜ் மாயாவை…

Read More

ஜோ தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜோ கதை கதையின் நாயகன் ஜோ, கோயம்புதூரில் கல்லூரியில் படிக்கிறார், அப்போது அங்கு சுஜி என்கிற மலையாள பெண்ணை காதலிக்கிறார். கல்லூரி முடியும் நிலையில் சுஜியிடம் இன்னும் 2 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறார். நாயகன் ஜோ சுருதி என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் சுருதிக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை, காரணம் சுருதி வேறொரு பையனை காதலிக்கிறார். இதனை அறிந்த ஜோ சுருதியை அவர் விரும்பியவருடன் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதும்,…

Read More

லாக்கர் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு விழா

தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான…

Read More

“சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் சித்தார்த், நிமிஷா சஜயன் மற்றும் சஹஸ்ரா ஸ்ரீ ஆகியோர் நடிப்பில், இயக்குநர் SU அருண் குமார் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘சித்தா’ திரைப்படத்தை, நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. திரை விமர்சகர்களால் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என்று பாராட்டப்பட்ட “சித்தா” படம், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசும், அற்புதமான…

Read More