டார்க் (2026) – முன்னோட்டம்
இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நடராஜ் மற்றும் கே. பாக்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள சைக்காலஜிக்கல் ஹாரர்-திரில்லர் திரைப்படமான “டார்க்” (Dark – 2026) திரைப்படத்தின் முழுமையான தமிழ் விமர்சனம் இதோ
டார்க் கதை

கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகரான நாயகன் விக்னேஷ் (அஜய் கார்த்தி), ஒரு மர்மமான கடந்த கால பின்னணி கொண்ட பழைய வீட்டிற்கு ‘பேயிங் கெஸ்ட்டாக’ குடிவருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் கருணாகரன் (கே. பாக்யராஜ்) அந்த வீட்டின் ரகசியங்களை மறைக்கிறார். விக்னேஷ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே, அமானுஷ்யமான சம்பவங்கள் அவர் கண்முன்னே நடக்கின்றன. அவரின் பகுத்தறிவு சிந்தனைகளை உலுக்கும் அந்த சம்பவங்களுக்கு நடுவே, ஒரு கொடூரமான குற்றமும் அரங்கேறுகிறது. அந்த குற்றத்தின் பின்னணி என்ன, அந்த வீட்டிற்குள் இருக்கும் மர்மம் என்ன என்பதை போலீஸ் அதிகாரி பாலச்சந்தர் (நட்டி நடராஜ்) எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

டார்க் (2026): வழக்கமான பேய் படங்களில் வரும் மொக்கையான காமெடி மற்றும் மசாலாக்கள் இல்லாமல், ஒரு பியூர் சைக்காலஜிக்கல் ஹாரர் படத்தை ரசிக்க நினைப்பவர்கள் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். கதையில் இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்திருந்தால் இந்த ‘டார்க்’ இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும்!
Read Also: Gatta Kusthi 2 Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அஜய் கார்த்திவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡மெதுவான சஸ்பென்ஸ்,அமானுஷ்யமான சூழல்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡பலவீனமான திரைக்கதை அமைப்பு
➡ஆங்காங்கே தொய்வடையும் வேகம்
ரேட்டிங்: ( 2.75 / 5 )



































