அன்பே டயானா தமிழ் திரைப்பட விமர்சனம்

அன்பே டயானா (2026) – முன்னோட்டம்

‘ஜாமா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மற்றும் நடிகர் பாரி இளவழகன், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட ஒரு கலகலப்பான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தை ஜூலை 2026-ல் தந்துள்ளார். ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியின் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

அன்பே டயானா கதை

சென்னையின் பெரம்பூர் பின்னணியில் கதை நகர்கிறது. ஒரு பாரம்பரியமான தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த சீதா கிருஷ்ணா என்கிற ‘சிஎஸ்கே’ (பாரி இளவழகன்), அதே பகுதியில் வாழும் ஆங்கிலோ-இந்திய (Anglo-Indian) கிறித்தவப் பெண்ணான மேஜிக் டயானாவை (ரம்யா ரanganathan) காதலிக்கிறார்.

வழக்கமான சாதி மற்றும் மதக் கட்டுப்பாடுகள் கொண்ட இவர்களது குடும்பத்தில் இந்தக் காதலுக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. காதலிப்பதற்காக ஒருவரை ஒருவர் தங்கள் மதச் சடங்குகளுக்கு மாறச் சொல்லி வற்புறுத்தும் சூழல் உருவாகிறது. இந்த கலாச்சார முரண்பாடுகளையும், குடும்பப் பின்னணியையும் தாண்டி இவர்களது காதல் எப்படி சுமுகமாக முடிந்தது என்பதை நகைக்சுவை மற்றும் எமோஷன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

‘அன்பே டயானா’ சில பழக்கப்பட்ட சுவாரசியக் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று கவலைகளை மறந்து வயிறு குலுங்கச் சிரித்து மகிழக்கூடிய ஒரு எளிய, அழகான ‘ஃபீல்-குட்’ (Feel-good) ரோம்-காம் மூவி!

Read Also: The Odyssey Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡பாரி மற்றும் ரம்யாவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡கலகலப்பான நகைச்சுவை மற்றும் திரைக்கதை
➡பெரம்பூர் பின்னணி
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡பழக்கப்பட்ட காதல் கதை
➡மெதுவான முதல் பாதி மாறும் மேலோட்டமான கதாபாத்திர வடிவமைப்பு

ரேட்டிங்: ( 3.25 / 5 )

 

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதி ஒடிசி திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஒஹ் சுகுமாரி தமிழ் திரைப்பட விமர்சனம்