மொத ராத்திரி (2026) – முன்னோட்டம்
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், மைதிலி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ (Modha Rathiri) திரைப்படத்தின் முழுமையான விமர்சனம் இதோ
மொத ராத்திரி கதை

துபாயில் வேலை பார்க்கும் மருதநாயகத்திற்கு (ரிஷிகாந்த்) தெரியாமலேயே ஊரில் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மறுபுறம், கதையின் நாயகி முத்துச்செல்வி (அனிஷ்மா) விருப்பமில்லாமல், வேறு வழியின்றி இவரைத் திருமணம் செய்து கொள்கிறார். முத்துச்செல்வியின் காதலன், “முதல் இரவுக்கு முன்பாக உன்னைக் கூட்டிச் சென்றுவிடுகிறேன்” என வாக்குறுதி அளிக்க, ஒரே இரவில் நடக்கும் கலாட்டாக்கள், குளறுபடிகள் மற்றும் திருப்பங்களே இப்படத்தின் மீதிக்கதை.

குடும்பத்துடன் சென்று எந்தவிதமான ஆபாசமும் இன்றி ஜாலியாகச் சிரித்து மகிழக்கூடிய ஒரு நல்ல கிராமத்து ரொமாண்டிக்-காமெடி திரைப்படம்.
Read Also: Magudam Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡ரிஷிகாந்தின் முதிர்ச்சியான நடிப்பும், அனிஷ்மாவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பரத் சங்கரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்
➡கே. பாக்கியராஜ் ஸ்டைல் திரைக்கதை
படத்தில் கடுப்பானவை
➡இரண்டாம் பாதி தொய்வு
➡யூகம் செய்யக்கூடிய கிளைமேக்ஸ்
ரேட்டிங்: ( 3.5 / 5 )




































