ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பிரமாண்டமாக தொடங்கியது!

உஸ்தாத் ராம் மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அவர்களது முந்தைய கல்ட் பிளாக்பஸ்டர் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலுக்காக இம்முறை இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘டபுஸ் ஐஸ்மார்ட்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இம்முறை இரட்டிப்பு மாஸாகவும், இரட்டிப்பு பொழுதுபோக்காகவும் இந்தப் படம் இருக்கும். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை பூரி கனெக்ட்ஸில் தயாரிக்கவுள்ளனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் பிரமாண்டமான தொடக்க…

Read More

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி இணையும் புதிய திரைப்படம் #RT4GM !!

தெலுங்கு திரையுலகில்  மாஸ் மஹாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி தொடர்ச்சியாக  ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது.  திரைத்துறையில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் இக்கூட்டணியும் ஒன்றாகும். இந்த வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.  டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி  மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் #RT4GM படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கோபிசந்த் மலினேனியின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களான கிராக் மற்றும்…

Read More

லைக்கா புரொடக்ஷன்ஸுடன் இணையும் 2018 இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன்- பிரம்மாண்டமான பொருட்செலவில் தரமான படைப்புகளை உருவாக்கி, திரை ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறார். இதன் காரணமாகவே இவருடைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்- இந்திய திரையுலகில் பிரபலமான முன்னணி வணிக முத்திரையுடன் வலம் வருகிறது. நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படைப்புகளை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், புதிய இளம் திறமையாளர்களை…

Read More

சபரீஷ் நந்தா – வசந்த் ரவி இணையும் புதிய படத்தை துவக்கி வைத்து வாழ்த்திய இயக்குனர் அமீர்

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் முன்னதாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கியுள்ளார். சபரீஷ் நந்தா இயக்கும் புதிய படத்தை ஜெ.எஸ்.எம். புரோடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள். தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் என்று முற்றிலும் வித்தியாசமான…

Read More

‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ் ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா…

Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார்…

Read More

ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் ‘ரன்னர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் திறமை தலைமுறை தாண்டிய சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் குறிப்பாக தெலுங்கில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது நடனம் பல நட்சத்திர கதாநாயகர்களையும் கவர்ந்துள்ளது. இவர் தற்போது ‘ரன்னர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு முன் ‘அரவிந்த் 2’ படத்தை…

Read More

விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஆகியோரின் நடிப்பில் ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் புதிய திரைப்படம்

Trending entertainment & White horse studios K. சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை…

Read More

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…

Read More

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’

நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ‘தேரு’…

Read More