கலகத் தலைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கலகத் தலைவன் கதை

வஜ்ரா என்கிற கார்ப்பரேட் கம்பெனி லாரிகளை தயாரிக்கிறது, அந்த லாரியில் இருந்து வெளியேறும் புகை சுற்று சூழலை மாசுபடுத்துகிறது இந்த தகவல் வெளியில் கசிந்ததும் , இதனை செய்தது யார் என விசாரிக்க வஜ்ரா குழு அர்ஜுனனை (ஆரவ் ) நியமிக்கறது , அர்ஜுனும் அதனை விசாரிக்க ஆரம்பிக்கிறார் ஒரு கட்டத்தில் தான் தெரிகிறது இதனை செய்தது கதையின் நாயகன் திரு (உதயநிதி ) என்பது இவர் இதனை செய்ததற்கான காரணம் இவரின் சிறு வயதில் இந்த வஜ்ரா கம்பெனியினால் இவரின் குடும்பம் பாதிக்க பட்டதுதான் , அப்படி இவருக்கு சிறு வயதில் என்ன ஆயிற்று என்பதும் அர்ஜுனிடம் இருந்து திரு தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை ….
இதனை இயக்குனர் மகிழ் திருமேனி அவருக்கே உண்டான பாணியில் வித்தியாசமாக இயக்கியுள்ளார்

படத்தில் சிறப்பானவை
வித்யாசமான கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
ஆரவ் – வின் அரக்கத்தனமான நடிப்பு
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் இரண்டாம் பாதி

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here