வித்தைக்காரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

வித்தைக்காரன் கதை

2003 ம் ஆண்டு மாரி, டாலர் அழகு, கல்கண்டு ரவி இவர்கள் மூவரும் ஒரு சேட்டுவிடம் வேலை செய்கின்றனர். இந்த சேட்டு சட்டத்திற்கு எதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் மூவரும் சேட்டுவிடம் வேலை கற்றுக்கொண்டு அவரை கொலை செய்துவிட்டு அவரின் இடத்திற்கு வருகிறார்கள், பிறகு அவரின் தொழிலையும் செய்கிறார்கள்.

Read Also: Birthmark Tamil Movie Review

20 வருடங்கள் கழித்து கதையின் நாயகன் வெற்றி ஒரு வித்தைக்காரனாக (magician) ஆக இருக்கிறார். இவர் தன் தேவைக்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுவார். இதனை பற்றி அறிந்த டாலர் அழகு, வெற்றியை வைத்து சில திருட்டுகளை திட்டமிடுகிறார், அதனை செயலும் படுத்துகிறார். அப்போது எதிர்பாராத விதமாக வெற்றிக்கு அடிபட்டு பழையதை மறந்து விடுகிறார். அதன் பிறகு ஒரு பெரிய திருட்டை திட்டமிடும் இவர்கள், வித்தையை மறந்த வெற்றியை வைத்து திருடினார்களா? அல்லது சொதப்பினர்களா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡சதீஷின் சிறப்பான நடிப்பு
➡ஆனந்த் ராஜின் நகைச்சுவையான நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡விறுவிறுப்பான விமான நிலைய காட்சி

படத்தில் கடுப்பானவை

➡படத்தை நம்முடன் இணைக்காத சில உணர்வுபூர்வமான காட்சிகள்
➡மேலும் மெருகேற்றப்படாத முதல்பாதி திரைக்கதை

Rating: ( 2.75/3 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *