மாய தேவராய் விஜய் சேதுபதி !!

அப்டியே Climax-ல அருவாளை தூக்கி போட்டு போய் புள்ள குட்டிய படிக்கவைங்கடானு தேவர்மகன்-ல கமல் பேசுனா காட்சி இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கும். அதுனால தான்ன  உலகநாயகன் சும்மா வா சொன்னாங்க ?? சரி இப்போ தேவர் மகன் 2 எப்போ வரும்னு ஒரு கேள்வி ? இதுக்கு ஏற்கனவே பதில் கிடைச்சுருச்சு அது என்னனா தலைவன் இருக்கிறான் னு ஒரு படம் கமல் நடிக்குறாரு. ஷூட்டிங்லாம் ஆரமிச்சுட்டாங்க என்ன வழக்கம் போல படம் வெளியாகுறதுக்கு டைம் ஆகும் போல, அதுக்குள்ள படத்துல அதான் கதை இதான் கதைனு ஒரு பக்கம் வாய்மொழியா ரசிகர்கள் மத்தியில படம் ஓடுது. 

சரி இதெல்லாம் இருக்கட்டும் இப்போ நமக்கு என்ன தகவல் கெடச்சுருக்குனா இந்த தலைவன் இருக்கிறான் படத்துல விஜய் சேதுபதி நடிக்கப்போறாராம். நாசருக்கு மகனாம். நாசர்ர தேவர் மகன் ல கமல் போட்ருவாரு 🗡 அப்போ இந்த படத்துல நாசர் மவன் வில்லனா தான இருக்க முடியும்னு ஒரு கணிப்பு.  சரி காத்திருந்து பாக்கலாம். இந்த படத்துக்கு இசை எ ஆர் ரஹமான் மற்றும் லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்குறாங்களாம் (இது 2019ல கமல் ஹாசன் சொன்ன ஸ்டேட்மென்ட்)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here