ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் கதை
ராஜா என்பவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்கிறார். அங்கு மருத்துவ செலவுக்கு 15 லட்சம் தேவைப்படுகிறது. ராஜா பணத்தை தயார் செய்ய முயற்சிக்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தூய்மை பணியாளர் சாவித்ரிக்கு துப்பாக்கி கிடைக்கிறது, கடன் பிரச்சனை காரணமாக நண்பரின் மூலம் துப்பாக்கியை விற்க முயற்சிக்கிறார்.
திருமணமான மதிக்கு, திருமண வாழ்வில் நிறைவும், நிம்மதியும் இல்லை அதனால் ஒருசில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை தீர்க்க மதி முயற்சிக்கிறார். ஒரு காதல் ஜோடி குடும்பத்திற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள் இவர்களின் அணைத்து பிரச்னைகளும் எப்படி ஒரே நேர்கோட்டில் வருகிறது என்பதும் , அனைவரின் பிரச்னையும் தீர்ந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரசாந்த் முருகன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்களம்
➡பரத் & அபிராமி நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡படத்தொகுப்பு
➡ஒளிப்பதிவு
➡ஒருசில வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2 .75 / 5 )