ஹார்ட்டின் (2026) – முன்னோட்டம்
இயக்குனர் கிஷோர் குமார் இயக்கத்தில், சனந்த், மடோனா செபாஸ்டியான், இமயா, மற்றும் வாட்ஸ் ஆப் மணி நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு காதல் மற்றும் காமெடித் திரைப்படம் தான் இந்த ‘ஹார்ட்டின்’.
ஹார்ட்டின் கதை

ஜெய்ப்பூரில் ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் ஹீரோ சிவா (சனந்த்), எப்போதுமே ஒரு சோகமான முகத்துடனும் பழைய நினைவுகளுடனும் வாழ்பவர். அங்கு அவருக்கு அறிமுகமாகும் சாதனா (இமயா) என்பவருடன் மெல்ல மெல்ல காதல் மலர்கிறது. இவர்களது காதல் அடுத்த கட்டத்திற்கு நகரும் நேரத்தில், ஒரு விபத்து ஏற்பட்டு சிவாவிற்கு தற்காலிக ஞாபக மறதி (Amnesia) ஏற்படுகிறது. அவர் தனது சமீபத்திய காதலை மறந்து, கல்லூரி காலத்து முன்னாள் காதலியான சாஹித்யா (மடோனா செபாஸ்டியான்) நினைவுகளுக்குச் சென்றுவிடுகிறார். இதன் பிறகு இந்த முக்கோணக் காதலில் என்ன நடக்கிறது, சிவா யாரை கரம்பிடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

விஷுவலாகவும், இசையாகவும் படம் பார்க்க நன்றாக இருந்தாலும், வலுவில்லாத திரைக்கதை மற்றும் பலவீனமான காதல் காட்சிகளால் இந்த ‘ஹார்ட்டின்’ ரசிகர்களின் இதயத்தை முழுமையாகத் தொடத் தவறுகிறது. ஒருமுறை பார்க்கக்கூடிய சாதாரண ஃபீல்-குட் காதல் படம்.
Read Also: Andharan Movie Review
படத்தில் சிறப்பானவை
➡சனந்த்,இமயா மற்றும் மடோனா செபாஸ்டியான்வின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡அழகான ஒளிப்பதிவு
➡ படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡முன்னரே கணிக்கக்கூடிய சில காட்சிகள்
➡பழைய பாணி திரைக்கதை
ரேட்டிங்: ( 2.75 / 5 )


































