கட்டா குஸ்தி 2 (2026) – முன்னோட்டம்
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கட்டா குஸ்தி 2” (Gatta Kusthi 2) தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படத்தின் தமிழ் விமர்சனம் இதோ
கட்டா குஸ்தி 2 கதை

முதல் பாகத்தில் குஸ்தி வளையத்திற்குள் மோதிக்கொண்ட வீராவும் (விஷ்ணு விஷால்) கீர்த்தியும் (ஐஸ்வர்யா லட்சுமி), இப்போது திருமணமாகி தங்களது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். வீரா இப்போது ஒரு ‘stay-at-home husband’ (வீட்டிலேயே இருக்கும் கணவன்). குஸ்தி ரிங்குக்கு வெளியே, இவர்களின் குடும்ப வாழ்க்கைக்குள் நடக்கும் ஈகோ சண்டைகளும், சுவாரசியமான மோதல்களுமே இந்த இரண்டாம் பாகத்தின் கதை. இவர்களது வாழ்க்கைக்குள் வரும் ஒரு குழந்தையும் (சாரா), அதனால் ஏற்படும் திருப்பங்களும், இறுதியில் இவர்களின் குடும்பம் எப்படி இணைகிறது என்பதையும் சுழன்று நகர்கிறது திரைக்கதை.

கட்டா குஸ்தி 2: சில லாஜிக் குறைகள் மற்றும் பழைய பாணி வசனங்கள் இருந்தாலும், குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று “வயிறு குலுங்க சிரித்து மகிழ” ஒரு பக்காவான ஃபேமிலி பிளாக்பஸ்டர் கேரண்டி!
Read Also: Nagabandham Movie Review
படத்தில் சிறப்பானவை
➡சுவாரஸ்யமான திரைக்கதை
➡விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாராவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡நகைச்சுவை காட்சிகள்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡கணிக்க முடிந்த காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸ்.
ரேட்டிங்: ( 3.25 / 5 )



































