Thamizpadam Admin

ஜெயம் ரவியின் “சைரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது… இதுவரை நாங்கள் தயாரித்துள்ள படங்களுக்கு உங்கள் ஆதரவைத் தந்துள்ளீர்கள்…

Read More

“நான் எப்போதுமே விஜய்யின் விசுவாசி தான்” ; ‘நினைவெல்லாம் நீயடா’ விழாவில் ஓப்பனாக பேசிய இயக்குநர் பேரரசு

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.. பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். “அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா,…

Read More

லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று…

Read More

கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்

இயக்குநர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன் & ரவி…

Read More

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஸ்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். கதாநாயகியாக மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி ‘அஸ்திரம்’ படத்திற்கு…

Read More

அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் ‘வெப்பம் குளிர் மழை’

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. மேலும், கடினமான பிரச்சனைகளை துணிச்சலாக எதிர்கொண்ட பல படங்கள், இயக்குநர்களின் அர்ப்பணிப்போடு பரவலான அளவில் பல தரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான திரவ்வின் வரவிருக்கும் திரைப்படமான ‘வெப்பம் குளிர் மழை’ ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது. எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர்…

Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் “விஸ்வம்பரா” படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்

மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான “விஸ்வம்பரா” படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார், மிகச்சிறப்பான தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர், நாடு முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலக சினிமாவுக்கு இணையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் உலகை உருவாக்க, படக்குழு 13 பெரிய செட்களை அமைத்தது, படத்தின் காட்சிகளை படமாக்கி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர்…

Read More

சிக்லெட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

சிக்லெட்ஸ் கதை கதையின் நாயகிகளாக மூன்று பெண்கள் இருக்கின்றனர், அவர்களின் பெற்றோருக்கு இவர்களை மருத்துவராக்க வேண்டும், அரசு அதிகாரியாக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் தனித்தனி கனவு இருக்கிறது. +2 முடித்த பிறகு கோச்சிங் சென்டருக்கு செல்கின்றனர், அங்கு காதலிக்கின்றனர், பிறகு இந்த மூன்று பெண்களும் அவர்களின் காதலனுடன் வெளியே சென்று சந்தோசமாக இருக்க பார்ட்டி ஒன்றை தயார் செய்கின்றனர். Read Also: Devil Tamil Movie Review அப்படி இந்த மூன்று ஜோடிகளும் தங்களின் பெற்றோர்களை…

Read More

தன் அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாய் அறிவித்த தளபதி விஜய்

அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த…

Read More

டெவில் தமிழ் திரைப்பட விமர்சனம்

டெவில் கதை கதையின் நாயகி ஹேமா மனஉளைச்சலில் இருக்கிறார், அப்போது அவர் காரை எடுத்துக்கொண்டு வேகமாக செல்கிறார், அப்படி சென்றுகொண்டிருக்கும்போது எதிரே ஒரு பையன் பைக்கில் வருகிறான், ஹேமா அவனை இடித்து விபத்துக்குள்ளாக்குகிறார். விபத்துக்குப்பின்னர் அடிபட்டவரை தேடி ஹேமா மருத்துவமனைக்கு செல்கிறார். அவரை சந்தித்தபிறகு அவரின் பெயர் ரோஷன் என்பது தெரியவருகிறது ரோஷனுக்கு கை அடிபட்டிருப்பதால் ஹேமா அவருக்கு சில உதவிவகள் செய்கிறார். Read Also: Vadakkupatti Ramasamy Tamil Movie Review ஹேமாவுடன் சாதாரணமாக ஆரமித்த…

Read More