தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனனன் இவர்களுடன் நான்காவது மிக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். படம், “கருமேகங்கள் கலைகின்றன.” ( “கருமேகங்கள் ஏன் கலைகின்றன ?” என்பது “கருமேகங்கள் கலைகின்றன“ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ) * இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25 முதல் கும்பகோணத்தில் தொடங்கிநடைபெற்று வருகிறது. உள்ளது. மேலும் சென்னை, ராமேஸ்வரம்போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில்திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும் Read Also: The Legent Movie…

Read More

தேசிய விருது வென்ற நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு ‘யாமா’ படக்குழு வாழ்த்து

நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், லட்சுமி பிரியா சந்திரமெளலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ‘யாமா’ திரைப்பட குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ‘யாமா’ படக்குழு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”தனது மாறுபட்ட நடிப்பாலும், அழுத்தமான கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய…

Read More

திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக ‘லக்’ எனும் இந்தி…

Read More

வாழ்த்து செய்தி!!! யார் யாருக்கு ?

திரைக் கலைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பேரார்வமும், எதிர்பார்ப்பும் பெருகிடும். இன்று பேரின்பச் செய்தியாக தமிழ் திரைப்பட உலகிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. பல்துறைக்கான முக்கிய விருதுகள் தமிழுக்கு கொண்டு சேர்த்த, சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று) சிறந்த திரைப்படம் – (சூரரை போற்று) சிறந்த திரைக்கதை – சுதா கோங்குரா (சூரரை போற்று) சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று) சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை…

Read More

90ஸ் களின் கனவு தேவதை “சிம்ரன்” சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா ?

தமிழ் சினிமாவில் சிம்ரனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது காரணம் அவரது நடிப்பால் 80ஸ் மற்றும் 90ஸ் இளைஞர்களை கவர்ந்தவர் சிம்ரன் சினிமாவுக்கு வந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது… சிம்ரன் சினிமா வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு சாவன் குமார் இயக்கிய சனம் ஹர்ஜாய் என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் சிம்ரன் அறிமுகமானார். நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும், தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் சூப்பர்ஹிட் முகாப்லா என்ற நிகழ்ச்சியின்…

Read More

மாநாடு பட வாய்ப்பை நழுவ விட்டேன் ; கோமல் சர்மா வருத்தம்

அழகும் நடிப்புத்திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள் இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகை கோமல் சர்மா . தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா, அதன்பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதேசமயம்…

Read More

ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்

ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் சைக்கோ த்ரில்லர் என வழக்கமாக வெளிவரும் திரைப்படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் அதை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. புன்னகை இளவரசி நடிகை சினேகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்…

Read More

“ரெஜினா” படத்தை பற்றி சுனைனா…

“ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக #ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதக்கிற காட்சி படத்தை பார்க்க தூண்டும். டைரக்டர் டாமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார். கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. டைரக்டருடைய முந்திய ஹிட் படங்களான “பைபிள் சுவத்திலே பிராணயம்”, “ஸ்டார்” போன்ற…

Read More

விக்னேஷ்சிவன்❤️நயன்தரா திருமண புகைப்படங்கள் வெளியானது…

இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது அவர்களின் திருமண புகைப்படங்கள்… Celebrities At Nayanthara Vignesh Shivan Wedding Click Here

Read More

நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் ‘பி எக்ஸ் எஸ் லைன் ’

நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள் நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பல்ப் எக்ஸ் ஸ்ருதி என்ற பெயரில் தோல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை தொழிலதிபர்கள் கௌதம் உப்பலூரி மற்றும் தீப்தி அலபதி ஆகியோர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மேலும் அவர்கள் பேசுகையில், ” பல்ப் எக்ஸ் ஸ்ருதி வரிசைக்காக நடிகை ஸ்ருதிஹாசனுடான எங்களுடைய ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கிறது. இதன்…

Read More