சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள். சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கன் –…

Read More

த்ரிஷாவின் மிரட்டலான நடிப்பில், தி ரோட் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது

AAA சினிமா பிரைவெட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் திரு அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்பட வெளியீடு தேதி அட்டகாசமான பின்னணி இசையோடு டீஸர் வடிவில் அறிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் தி ரோட் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது . இத்திரைப்படம் திரிஷாவின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அக்டோபர் 19-ல் லியோ வெளியாக இருக்கும்…

Read More

டெவில்’ படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம்…

Read More

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்

முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக #சமையல் குறிப்பு சவால் ஒன்றை அப்படத்தின் நாயகியான அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த…

Read More

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’. இதில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல்,…

Read More

சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்

இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் ‘சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’. இதில் பான்…

Read More

மை3” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில்,…

Read More

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்

அண்மையில் புகழ்பெற்ற இயக்குநரான மாருதி, நடிகை நிதி அகர்வாலுக்கு ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என ட்வீட்டரில் தெரிவித்தார். ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சிகரமான இந்நிகழ்வால் ட்விட்டர் சமூக வலைதளம் பரபரப்பானது. பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக பல விசயங்களை முன் வைத்தனர். மேலும் மாருதியின் டிவிட் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு ‘ராஜா டீலக்ஸ்’ எனும் படத்தில் நடிகை நிதி அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கிறார் என்றும், அவர் நட்சத்திர நடிகரான பிரபாஸுடன் திரையை பகிர்ந்து கொள்கிறார் என்றும்,…

Read More

விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி இணையும் ரோமியோ படத்தின் அறிவிப்பு வெளியானது

தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளரான விஜய் ஆண்டனி தற்போது பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கொடுக்கும் ஒருவராக மாறியுள்ளார். அவரது திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்து அவரை பாக்ஸ் ஆஃபிஸ் நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. இசையமைப்பாளராக இருந்து நடிகராகி பின்பு இயக்குநரான விஜய் ஆண்டனி இப்போது தயாரிப்பிலும் கால் பதிக்கும் விதமாக தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’லைத் தொடங்கியுள்ளார். ‘குட் டெவில்’ நிறுவனம் ஆர்வமும் திறமையும் உள்ள புது…

Read More

யார் இந்த நடிகை சாந்தி பாலச்சந்திரன்?

நடிகை சாந்தி பாலச்சந்திரன் குறித்து: திரைப்படத் துறையில் பாரம்பரியமான மற்றும் அதே சமயத்தில் வசீகரமான நடிகைகள் அரிதாகவே இருப்பார்கள். இத்தகைய கலைஞர்கள் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு மற்றும் நேர்மறையான வரவேற்புடன் கொண்டாடப்படுவார்கள். நடிகை சாந்தி பாலச்சந்திரன் அப்படியான நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் அமேசான் ஒரிஜினல் வெப் சீரிஸில் வெளியான ‘ஸ்வீட் காரம் காபி’ என்ற தொடரில் நிவியாக அவரது அற்புதமான நடிப்பு பார்வையாளர் மற்றும் விமர்கர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றது. இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு…

Read More