மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் “விஸ்வம்பரா” படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்

மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான “விஸ்வம்பரா” படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார், மிகச்சிறப்பான தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர், நாடு முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலக சினிமாவுக்கு இணையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் உலகை உருவாக்க, படக்குழு 13 பெரிய செட்களை அமைத்தது, படத்தின் காட்சிகளை படமாக்கி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர்…

Read More

தன் அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாய் அறிவித்த தளபதி விஜய்

அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த…

Read More

நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மங்கி மேன்’ படத்தின் டிரைலர் வெளியானது

தென்னிந்திய நடிகையான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது அற்பதமான நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர், மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் அவரது நடிப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ மற்றும் தெலுங்கில்…

Read More

நாகேஷின் பேரன் ( ஆனந்தபாபுவின் இளையமகன்) கதாநாயகனாக அறிமுகமாகிறார்

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் இளைய மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் தயாராகி வருகிறது. நாகேஷின் நினைவு நாளான இன்று (31.01.2024) அதற்கான முதற்கட்ட வேலைகளாக இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜின் வாழ்த்துகளுடன் துவங்கியது பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகிறது. சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில்…

Read More

முதல் படம் 25வது ஆண்டு !தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” இன்றோடு 25வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்கு முதல் படம் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி அவர்களை நேரில் சந்தித்து இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து ஆசி பெற்றார். “இது தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். வாழ்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்….

Read More

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும்…

Read More

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Life Cycle Creations சார்பில் தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறைமிக்க சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை முன்னணி இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே…

Read More

ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இனியா கடந்த ஆண்டு துவங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ. பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா…

Read More

“போர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள “போர்”, படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும்,…

Read More

’விடுதலை1’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி – சூரி நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை I & II’. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’ திரையிடப்படத் தேர்வாகியுள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது….

Read More