சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள். சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கன் –…

Read More

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‘டிக்கி டிக்கி டா’ எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் வெளியிட்டிருக்கிறது. இந்த பாடலுக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்தப் பாடலை அசல் கோளாறு,…

Read More

‘புஷ்பா2 – தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது!

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2-தி ரூல்’ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ தேதியுடன் வெளியாகியுள்ள இந்த புதிய போஸ்டர் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் விடுமுறை நாட்களின் நீட்டிக்கப்பட்ட வாரயிறுதியுடன் கூடிய இந்த வெளியீட்டுத் தேதி, பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அதிகரிக்க சரியான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘புஷ்பா-தி ரைஸ்’…

Read More

“உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது!!

ரசிகர்களே தயாராகி கொள்ளுங்கள் அதிரடியான திரை விருந்து தயாராகி வருகிறது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கரின் வெற்றிகரமான கூட்டணியில், உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் பரபரப்பாகப் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இடைவெளியில் தயாரிப்பாளர்கள் ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக சில படங்களை பிரத்தியேகமாகப் பகிர்ந்துள்ளனர் இந்த போஸ்டர்களில் பவன் கல்யாண் அடர்ந்த இருள் பின்னணியில், காக்கி உடையில் அசத்தலாகக் காட்சியளிக்கிறார், மேலும் ஒரு போஸ்டரில் அவர் இயக்குநர்…

Read More

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கி அசத்திய “ஒன் 2 ஒன்” பட இயக்குநர்!!!

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்”. முழுக்கப்படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். மேலும் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் K.திருஞானம் அவருக்கு ஒரு புதிய IPhone…

Read More

தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்!

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் பார்வையாளர்களின் குட்புக்கில் இடம் பெறத் தவறுவதில்லை. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படியான ஒரு டார்க் காமெடி ஜானரில் ‘முஸ்தபா முஸ்தபா’ படம் உருவாகியுள்ளது. தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன்,…

Read More

‘அடியே’ பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும்…

Read More

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 அன்று வெளியாகிறது!

தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக ‘ரத்தம்’ வெளியாக உள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்து வெளியீட்டை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு அறிவித்துள்ளது. ‘தமிழ் படம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர்…

Read More

இந்திய அரசியல்வாதியும், விலங்குநல ஆர்வலருமான திருமதி. மேனகா சஞ்சை காந்தி அவர்களின் பாராட்டுகளைப் பெற்ற“ஷாட் பூட் த்ரீ” திரைப்படம்

யுனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பாக திரு. அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் தயாரித்து இயக்கி, வெங்கட்பிரபு, ஸ்னேகா, யோகிபாபு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் “ஷாட் பூட் த்ரீ”. இத்திரைபடத்தின் சிறப்புக்காட்சிகள் சில முக்கிய பிரமுகர்களுக்குத் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. கடந்தவாரம் விலங்குகள் நல ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான திருமதி. மேனகா சஞ்சய் காந்தி அவர்களுக்குத் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த திருமதி. மேனகா சஞ்சை காந்தி அவர்களின் பாராட்டு, உலகெங்கும் உள்ள குழந்தைகள் மற்றும்…

Read More

ஐநூறு கோடி ரூபாயைக் கடந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான நான்கு தினத்திற்குள் ஐநூற்றியிருபது கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்து வருகிறது. ‘ஜவான்’ படம் வெளியாகி மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 9 ஆம் தேதி, இந்திய திரையுலக…

Read More