அசல் கோலாரின் ‘ஹே சிரி’ பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது

வசீகரிக்கும் சுயாதீன பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் திங்க் மியூசிக் பல பாடல்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று ‘ஹே சிரி’ பாடல். வெளியான ஒரே இரவில் இது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹே புள்ள’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, திங்க் மியூசிக் மற்றும் இண்டீ ஆர்ட்டிஸ்ட் கிரண் சுரத்தின் இரண்டாவது கூட்டணியில் ‘ஹே சிரி’ பாடல் உருவாகியுள்ளது. ஆதித்யா ஆர்.கே (சூப்பர் சிங்கர் & டான் ‘பே’ பாடல்…

Read More

இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு..

ஜஹிந்தியில் ‘ஜிந்தா பண்டா’ என்றும், தமிழில் ‘வந்த இடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துலிபெலா’ என்றும் வெளியாகிறது. ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. The Sound of Jawan ! Song out today at 12:50pm !#ZindaBanda (Hindi)#VandhaEdam (Tamil)#DhummeDhulipelaa (Telugu)#Jawan releasing worldwide on…

Read More

புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான்

தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.  பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு, துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது….

Read More

டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி பிக் புல்’ சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களது வெற்றிப் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு மும்பையில் தொடங்கியது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக ராம் ஸ்டைலான மேக் ஓவரில் மாறியுள்ளார். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். படத்தின்…

Read More

இயற்கைக்கே லஞ்சம் கொடுக்கும் அளவு நிலைமை மாறிவிட்டது ; மரம் நடு விழாவில் வேதனையை வெளிப்படுத்திய விஷால்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 8-வது நினைவு தினம் சென்னையில் வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் கனவான மரம் நடுவது, இயற்கையை காப்பது என்கிற வேண்டுகோளுக்கு இணங்க தனது தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மெகா மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு…

Read More

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

மொழி பேதங்களைக் கடந்து நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்துளார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு அடுத்து தன்னுடைய பான் இந்திய படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்த்துள்ளார். வெங்கி அட்லூரி நடிகர் தனுஷூடன் ’சார்/வாத்தி’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய சமூகப் பொறுப்பைக் கொண்ட இயக்குநராக அவரது நற்பெயரை உயர்த்தியது….

Read More

”மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்” ஐஸ்வர்யா மேனன்

கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இண்டியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருகிறார். இந்நிலையில் மாபெரும் ஜாக்பாட்டாக மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இதுகுறித்துப் பேசிய அவர், “நான் மம்முட்டியின் தீவிர…

Read More

பிரமாண்ட பான் இந்திய திரைப்படம் மட்கா #VT14 பூஜையுடன் இனிதே துவங்கியது

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த #VT14 பிரமாண்ட திரைப்படம் இன்று ஹைதராபாத்தில் படக்குழுவினர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இவ்விழாவினில் சுரேஷ் பாபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள்…

Read More

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா இணையும் #D51 படத்தின் அறிவிப்பு

பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இந்தப்படத்திற்காக இணைய உள்ளார். தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படம், நாராயண் தாஸ் கே நாரங்கின் ஆசிகளுடன்,…

Read More

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஒ டி டி யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்…

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் , சாம்ஸ் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ஜூபின்  இசை அமைக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார். இவர் ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில்.உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். யோக்கியன் படம் முதன்.முறை யாக ஒரே…

Read More